

இங்கிலாந்து ஒருநாள் கேப்டன் இயான் மோர்கன் தனது ஆல் டைம் லெவன் அணியை வெளியிட்டுள்ளார். இதில் சச்சின், திராவிட் ஆகியோர் இடம்பெறவில்லை. மாறாக அனில் கும்ப்ளே, தோனி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அதாவது தன்னுடன் ஆடியவர்கள், தன் மீது தாக்கம் செலுத்திய வீரர்கள் என்ற அடிப்படையில் இந்த அணியைத் தேர்வு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
தொடக்க வீரராக அலிஸ்டர் குக் இடம்பெற்றுள்ளார். ஜாக் காலிஸ் இடம்பெற்றுள்ளார். ரிக்கி பாண்டிங், பிரையன் லாரா ஆகியோரும் பந்து வீச்சில் இந்தியாவின் அனில் கும்ப்ளேயும், விக்கெட் கீப்பராக தோனியும் இடம்பெற்றுள்ளனர். அதே வேளையில் சங்கக்காராவும் இடம்பெற்றுள்ளார். ஷேன் வார்ன், முரளிதரன் ஆகியோர் இடம்பெறாததும் சச்சின் இடம்பெறாததும் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேகப்பந்து வீச்சாளர்களாக ஜேம்ஸ் ஆண்டர்சன், டேல் ஸ்டெய்ன், மிட்செல் ஜான்சன் இடம்பெற்றுள்ளனர்.
இயன் மோர்கனின் ஆல்டைம் லெவன் அணி வருமாறு:
அலிஸ்டர் குக் (கேப்டன்), ஜாக் காலிஸ், ரிக்கி பாண்டிங், பிரையன் லாரா, ஏ.பி.டிவில்லியர்ஸ், குமார் சங்கக்காரா, தோனி, அனில் கும்ப்ளே, ஜேம்ஸ் ஆண்டர்சன், டேல் ஸ்டெய்ன், மிட்செல் ஜான்சன்.