

தமிழ்நாடு கூடைப்பந்து கழகம், அரைஸ் அறக்கட்டளை, கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம், பி.எஸ்.ஜி. விளையாட்டு சங்கம் சார்பில் கோவை பிஎஸ்ஜி உள் விளையாட்டு அரங்கில் 31-வது பெடரேசன் கோப்பைக்கான போட்டி நேற்று தொடங்கியது.
இதில் குஜராத், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், தமிழ்நாடு, உத்தராகண்ட், டெல்லி, தெலங்கானா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர் மாநில அணிகள் மற்றும் விமானப்படை, மத்திய போலீஸ், ரயில்வே உள்ளிட்ட அணிகள் பங்கேற்றுள்ளன.
நேற்று ஆண்கள் பிரிவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் விமானப்படை - ராணுவ படைப் பிரிவு அணிகள் மோதின. இதில் ராணுவ அணி 57-51 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் ஓஎன்ஜிசி அணி 75-64 என மத்திய ரயில்வே அணியை வீழ்த்தியது. மகளிர் பிரிவில் தெலங்கானா 70-39 என்ற கணக்கில் பஞ்சாப் அணியையும், கேரளா 74-36 என்ற கணக்கில் டெல்லி அணியையும் வென்றன.