கால் இறுதியில் மனோஜ் குமார்

கால் இறுதியில் மனோஜ் குமார்
Updated on
1 min read

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற மனோஜ் குமார் பல்கேரிய குத்துச்சண்டை போட்டி யில் கால் இறுதிக்கு முன்னேறினர்.

பல்கேரியாவின் சோபியா நகரில் 68-வது ஸ்டிரன்ட்ஜா நினைவு கோப்பைக்கான குத்துச் சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 69 கிலோ எடை பிரிவில் நேரடியாக 2-வது சுற்றில் பங்கேற்ற மனோஜ் குமார், பல்கேரியாவை சேர்ந்த ராபர்ட் ஷாமசன்யானை வீழ்த்தினார். கால் இறுதியில் மவுரிஷியஸ் நாட்டை சேர்ந்த மெர்வென் கிளேயருடன் மோதுகிறார் மனோஜ் குமார்.

மற்ற இந்திய வீரர்களான அமித் பன்கல் 49 கிலோ எடை பிரிவில் அர்மேனியாவின் காஸ்பர் பாபஹன்யனையும், தாமஸ் மெயிட்டி மெயின்பம் 64 கிலோ எடை பிரிவில் போலந்தின் லூக்காஸ் நியம்ஷெக்கையும் வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறி னர். அதேவேளையில் 91 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் சதீஷ் குமாரும், 81 கிலோ எடைபிரிவில் மணீஷ் பன்வாரும் தோல்வியடைந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in