மே.இ.தீவுகள் தொடருக்கு மிஸ்பா உல்-ஹக் கேப்டன்

மே.இ.தீவுகள் தொடருக்கு மிஸ்பா உல்-ஹக் கேப்டன்
Updated on
1 min read

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி மிஸ்பா உல்-ஹக் தலைமையில் களமிறங்க உள்ளது.

43 வயதான மிஸ்பா தலை மையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் பெற்றது. இதனால் அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.

இதற்கிடையே தனது எதிர்காலத் திட்டங்கள் குறித்து மிஸ்பா முடிவு எடுக்க வேண்டும் என பாகிஸ்தான் வாரியம் தரப்பில் அவரிடம் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் வாரியத் தலைவர் ஷகார்யார் கானை நேற்று மிஸ்பா சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு ஷகார்யார் கான் கூறும்போது, “அடுத்த மாதம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட தயாராக இருப்பதாக மிஸ்பா என்னிடம் தெரிவித்தார். இந்தத் தொடரில் அவரே கேப்டனாக செயல்படுவார். இது தேர்வுக்குழுவுக்கு தெரியப்படுத்தப்படும்’’ என்றார்.

பாகிஸ்தான் அணி அடுத்த மாதம் மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஏப்ரல் 22-ம் தேதி பார்படாஸில் தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்னதாக நான்கு டி20 ஆட்டம், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் அணி விளையாட உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in