Published : 07 Jan 2014 01:08 PM
Last Updated : 07 Jan 2014 01:08 PM

ஐ.சி.சி. தரவரிசை: 5-வது இடத்தில் புஜாரா

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய பேட்ஸ்மேன் சேதேஷ்வர் புஜாரா இரு இடங்கள் முன்னேற்றம் கண்டு 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். அவர் 851 ரேங்கிங் புள்ளிகளைப் பெற்றுள்ளார். இது அவருடைய அதிகபட்ச ரேங்கிங் புள்ளிகளாகும்.

அதேநேரத்தில் இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேனான விராட் கோலி இரு இடங்கள் சறுக்கி இப்போது 11-வது இடத்தைப் பிடித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் 912 ரேட்டிங் புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்திலும், மேற்கிந்தியத் தீவுகளின் சிவநாராயண் சந்தர்பால் (876) 2-வது இடத்திலும், நியூஸிலாந்தின் ராஸ் டெய்லர் (871) 3-வது இடத்திலும் உள்ளனர்.

பௌலர்கள் தரவரிசையைப் பொறுத்தவரையில் இந்திய வீரர் அஸ்வின் 7-வது இடத்தில் உள்ளார். மற்றொரு இந்திய வீரர் பிரக்யான் ஓஜா 9-வது இடத்தில் உள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் 37 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஜான்சன் 8-வது இடத்தைப் பிடித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவின் வெர்னான் பிலாண்டர், டேல் ஸ்டெயின், ஆஸ்திரேலியாவின் ரியான் ஹாரிஸ் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர். ஆல்ரவுண்டர்கள் தரவரிசையைப் பொறுத்தவரையில் இந்திய வீரர் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x