

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ் சர்ஸ் பெங்களூரு அணி யின் கேப்டனாக உள்ள விராட் கோலி வரும் 14-ம் தேதி மும்பை அணிக்கு எதிராக நடைபெறும் ஆட்டத்தில் களமிறங்கக்கூடும் என தெரிகிறது.
இந்திய அணியின் கேப்ட னான விராட் கோலி, ஆஸ்திரே லியாவுக்கு எதிரான ராஞ்சி யில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியின் போது தோள்பட்டை யில் காயம் அடைந்தார். இதனால் தர்மசலாவில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் விளை யாடாத அவர் ஐபிஎல் தொடரின் இரு ஆட்டங்களிலும் பங்கேற்க வில்லை.
இந்நிலையில் கோலி, உடற் பயிற்சி கூடத்தில் பயிற்சிகள் செய்யும் வீடியோவை இன்ஸ் டாகிராமில் பதிவேற்றம் செய் துள்ளார். அதில், கோலி பளுதூக் குதல், ஜெர்க் டிரில் செய்வது போன்ற காட்சிகள் உள்ளது. இது அவர் முழு உடல் தகுதியை எட்டும் நிலையில் உள்ளதையே குறிப்பிடுவதாக தெரிகிறது.
‘‘இனிமேலும் களத்தில் இறங்கி விளையாட காத்திருக்க முடியாது. கிட்டத்தட்ட நெருங்கி விட்டேன் ஏப்ரல் 14?’’ என்ற தகவலையும் விராட் கோலி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஏற்கெனவே கோலி தனது பேட்டி ஒன்றில், 120 சதவீதம் உடல் தகுதியுடன் இருந்தால் மட்டுமே ஐபிஎல் தொடரில் விளையாடுவேன் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.