Published : 24 Aug 2016 09:09 AM
Last Updated : 24 Aug 2016 09:09 AM

தென் மண்டல அளவிலான போட்டி: ஹாக்கியில் லயோலா கல்லூரி வெற்றி

சென்னை வேப்பேரியில் உள்ள புனித பால்ஸ் மேல்நிலைப்பள் ளியின் 300-வது ஆண்டுவிழாவை யொட்டி தென் மண்டல அளவிலான பள்ளிகள், கல்லூரி களுக்கு இடையேயான விளை யாட்டு போட்டிகள் மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்டு வருகிறது.

நேற்று கல்லூரி அணிகள் இடையேயான ஹாக்கியில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் 7-0 என்ற கணக்கில் ஜேப்பியார் கல்லூ ரியை வீழ்த்தியது. மற்ற ஆட்டங்களில் பெங்களூரு புனித ஜோசப் வணிகவியல் கல்லூரி 5-4 என்ற கணக்கில் ஆவடி நாசரேத் கல்லூரியையும், சென்னை லயோலா கல்லூரி 7-0 என்ற கணக்கில் புனித ஜோசப் இன்ஜினியரிங் கல்லூரியையும் வீழ்த்தின.

கால்பந்து போட்டியில் நடை பெற்ற ஆட்டங்களில் எம்சிசி சென்னை, புனித ஜோசப் இன்ஜினியரிங் கல்லூரி, லயோலா கல்லூரி அணிகள் வெற்றி பெற்றன. பெங்களூரு வணிகவியல் கல்லூரி-விவேகானந்தா கல்லூரி அணிகள் இடையேயான ஆட்டம் கோலின்றி டிராவில் முடிவடைந்தது.

பள்ளிகள் இடையிலான ஹாக்கியில் திருச்சி ஹாஜாமைன் பள்ளி 4-0 என்ற கணக்கில் ஏற்காடு மான் போர்ட் அணியையும், அரியலூர் ஜிஹெச்எஸ்எஸ் அணி 4-1 என்ற கணக்கில் ராமநாதபுரம் டிடி விநாயகா அணியையும், சென்னை புனித பால்ஸ் பள்ளி 7-1 என்ற கணக்கில் நெல்லை புனித ஜான்ஸ் பள்ளி அணியையும் வீழ்த்தின.

கால்பந்தில் திருச்சி ஹாஜாமைன், சென்னை பி.டி.லீ உயர் நிலைப்பள்ளி அணிகள் வெற்றி பெற்றன. நெய்வேலி என்எல்சி பள்ளி-சென்னை வெஸ்லி உயர்நிலைப்பள்ளி அணிகள் மோதிய ஆட்டம் கோலின்றி டிராவில் முடிவடைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x