

இலங்கை கிரிக்கெட் வீரர் திலகரத்னே தில்ஷன், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக ஒய்வு பெற இருப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இது குறித்து நாளை அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் என்றும் இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு அளிப்பதற்காக இந்த முடிவு எடுத்துள்ளதாக திலகரத்னே தில்ஷன் தெரிவித்துள்ளதாகவும் அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .
14 ஆண்டுகளாக 87 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள திலகரத்னே தில்ஷன், 5492 ரன்களை குவித்துள்ளார்.