

இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டியோடு டி20 கிரிக்கெட் போட்டியிலிருந்து விடை பெறுகிறார் இலங்கை வீரர் ஜெயவர்த்தனா. ஜெயவர்த்தனாவின் ஓய்வு முடிவை டுவிட்டரில் வெளியிட் டுள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.
இலங்கை வீரர் சங்க காரா டி20 போட்டியில் இருந்து விடைபெறுவதாக ஞாயிற்றுக் கிழமை அறிவித்த நிலையில், ஜெயவர்த்தனாவின் ஓய்வு முடிவு திங்கள்கிழமை வெளியாகியுள்ளது. 36 வயதாகும் ஜெயவர்த் தனா 5-வது டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாடவுள் ளார். கடந்த டி20 உலகக் கோப்பையில் ஜெயவர்த்தனா தலைமையில் பங்கேற்ற இலங்கை அணி இறுதிச்சுற்று வரை முன்னேறியது.
இதுவரை 49 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஜெயவர்த்தனா 1,335 ரன்கள் குவித்துள்ளார். அதில் ஒரு சதமும், 8 அரைசதங்களும் அடங்கும்.