என் முயற்சிகளை என்றும் கைவிடமாட்டேன்: செரினா வில்லியம்ஸ் உறுதி

என் முயற்சிகளை என்றும் கைவிடமாட்டேன்: செரினா வில்லியம்ஸ் உறுதி
Updated on
1 min read

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி யின் இறுதி ஆட்டத்தில் தோற்றா லும் தன் முயற்சிகளை என்றும் கைவிடப் போவதில்லை என்று செரினா வில்லியம்ஸ் கூறியுள்ளார்.

அமெரிக்க டென்னிஸ் வீராங் கனையான செரினா வில்லியம்ஸ் இதுவரை 21 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இன்னும் ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றால் 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற ஸ்டெபி கிராபின் சாதனையை அவர் சமன் செய்துவிடுவார். ஆனால் கடந்த ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியிலும், நேற்று முன்தினம் நடந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இறுதி ஆட்டத்திலும் தோற்றதால் ஸ்டெபியின் சாதனையை சமன் செய்யும் செரினாவின் கனவு நிறைவேறாமல் இருக்கிறது. மேலும் பெண்கள் டென்னிஸ் உலகில் செரினாவின் பிடி தளர்வதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பாரிஸில் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் செரினா வில்லியம்ஸ் கூறியதாவது:

முகுருசாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் நான் நிறைய தவறுகளைச் செய்தேன். நான் இன்னும் சிறப்பாக சர்வீஸ்கள் மற்றும் ரிட்டர்ன்களைச் செய்தி ருக்க வேண்டும்.

இறுதி ஆட்டத்தில் வெல்வ தற்கான முழு ஆற்றலை யும் நான் செயல்படுத்த வில்லை. ஆனால் அவர் செயல்படுத்தினார். அதனால் அவர் வெற்றி பெற்றார். முகுருசாவின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. இந்த தொல்விக்கான காரணங்களை ஆராய்ந்து அவற்றை தீர்க்க முயல்வேன் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in