வங்கதேச பந்து வீச்சு பயிற்சியாளர் வால்ஷ்

வங்கதேச பந்து வீச்சு பயிற்சியாளர் வால்ஷ்
Updated on
1 min read

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கோர்ட்னி வால்ஷ், வங்க தேச அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வங்கதேச கிரிக்கெட் வாரியம் இந்த தகவலை அதிகாரப் பூர்வமாக வெளியிடும் முன்னரே மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வால்ஷ் வரும் 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரை பந்துவீச்சு பயிற்சியாளராக நீடிப்பார்.

டெஸ்ட் போட்டிகளில் 519 விக்கெட்களும் ஒருநாள் போட்டியில் 217 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ள வால்ஷ், 2001-ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 17 வருடங்கள் கிரிக்கெட்டில் பயணம் செய்துள்ள 53 வயதான அவர், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரிய தேர்வுக்குழு உறுப்பினராக கடந்த இரு ஆண்டுகள் பணியாற்றினார். இந்தப் பணியை நிறைவு செய்துள்ள அவர் தற்போது வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக மாறியுள்ளார்.

இதுகுறித்து வால்ஷ் கூறும்போது, "வங்கதேச கிரிக்கெட் வாரியத்தில் சிறப்பு பந்து வீச்சு பயிற்சியாளராக இணைவது சிலிர்ப்பூட்டும் வகையில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே வங்கதேச அணியின் ஆட்டத்தை கவனித்து வருகிறேன். திறமையான வீரர்கள் பலர் அணியில் உள்ளனர். சண்டிகா ஹதுருசின்கா பயிற்சியாளராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவருடன் இணைந்து அணியின் நேர்மறையான முன்னேற்றத்துக்கு உதவுவேன் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in