Published : 21 Sep 2013 05:55 PM
Last Updated : 21 Sep 2013 05:55 PM

குருநாத் மெய்யப்பன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனின் மருமகனும், சென்னை அணியின் முன்னாள் நிர்வாகியுமான குருநாத் மெய்யப்பன் மீது மும்பை காவல்துறை சனிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

அவருடன், நடிகர் விண்டூ தாரா சிங் மற்றும் 20 பேர் மீதும் குற்றப்பத்திரிகை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 11,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில், பாகிஸ்தான் கிரிக்கெட் நடுவர் ஆசாத் ரவுஃப் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த 15 சூதாட்ட தரகர்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளது.

முன்னதாக, குருநாத் மெய்யப்பன் ஐபில் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடர்பாக கேட்டதற்கு, அந்த விவகாரத்தில் தான் தலையிடுவதற்கு எதுவும் இல்லை என்றும், சட்டம் தனது கடமையைச் செய்யும் என்றும் பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசன் கருத்து தெரிவித்தார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின்போது ஸ்பாட் பிக்ஸிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பனை மும்பை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக, குருநாத் மெய்யப்பன் மீது மும்பை காவல்துறையினர் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக இன்று கருத்து தெரிவித்துள்ள பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசன், “இது குருநாத் மெய்யப்பன் அணுக வேண்டிய விஷயம். அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டால், அவர் அதை எதிர்கொள்ள வேண்டும். அவர் ஏற்கெனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுவிட்டதால், அணியுடன் தொடர்பில் இல்லை. அவர்தான் தன் நிலையைப் பார்த்துக்கொள்ள வேண்டுமே தவிர, நான் செய்வதற்கு எதுவுமே இல்லை” என்றார்.

ஐபிஎல் போட்டிகளின்போது ஸ்பாட் ஃபிக்ஸிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், குருநாத் மெய்யப்பனும், அவருடன் தொடர்புடைய இந்தி நடிகர் விண்டூ தாராசிங்கும் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x