

சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு அமைப்பின்(வாடா) அதிகாரப் பூர்வ இணையத்தளத்தில் ரஷ்யாவை சேர்ந்த பேன்ஸி பியர்ஸ் என்ற கும்பல் புகுந்து பல்வேறு தகவல்களை திருடி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந் துள்ளது. இணையத்தள தகவல் களை திருடும் கும்பல் அமெரிக் காவை சேர்ந்த 4 வீராங்கனை களை குறிவைத்து செயல்படு வதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ், டென்னிஸ் வீராங்கனைகளான செரீனா வில்லியம், வீனஸ் வில்லியம்ஸ், கூடைப்பந்து வீராங்கனை எலினா டெல் ஆகியோர் ரியோ ஒலிம்பிக் கில் சிறப்பாக விளையாடினார்கள்.
ஆனால் நியாயமாக நடந்து கொள்ளவில்லை. அவர்கள் ஒரு சில மருந்துகளை பயன்படுத் துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது எனவும் அவர்கள் தங்களது இணையத்தளத்தில் குறிப்பிட்டுள் ளதாக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.