போபண்ணா ஜோடி முதல் சுற்றில் தோல்வி

போபண்ணா ஜோடி முதல் சுற்றில் தோல்வி
Updated on
1 min read

சுவிட்சர்லாந்தின் பசல் நகரில் உள்ளரங்கு டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் போபண்ணா- ருமேனியாவின் புளோரின் ஜோடி, அலெக்சாண்டர் (ஆஸ்திரியா)- புருனோ சோரிஸ் (பிரேசில்) ஜோடியை எதிர்த்து விளையாடியது. முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் போபண்ணா ஜோடி கைப்பற்றியது.

இரண்டாவது செட்டை அலெக்சாண்டர் - புருனோ ஜோடி 6-1 என வசமாக்கியது. இதனால் வெற்றியை நிர்ணயிக்க சூப்பர் டை பிரேக்கர் கடைபிடிக்கப் பட்டது. இதில் அலெக்சாண்டர் - புருனோ ஜோடி சிறப்பாக விளை யாடி 10-8 என்ற கணக்கில் போபண்ணா ஜோடியை தோற்கடித் தது.

இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 2 நிமிடங்கள் நடைபெற்றது. கடந்த வாரம் வியன்னா ஒபனிலும் போபண்ணா- புளோரின் ஜோடி முதல் சுற்றிலேயே வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in