Published : 31 Dec 2013 09:19 PM
Last Updated : 31 Dec 2013 09:19 PM

நியூஸிலாந்து தொடர்: இந்திய அணியில் யுவராஜ் நீக்கம்

நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து யுவராஜ் சிங் நீக்கப்பட்டுள்ளார். அதேவேளையில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஈஸ்வர் பாண்டே டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ளார்.

வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன், ஆல் ரவுண்டர் ஸ்டுவர்ட் பின்னி ஆகியோர் ஒருநாள் அணியில் இடம் பெற்றுள்ளனர். இதில் ஸ்டுவர்ட் பின்னி கர்நாடகத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் ஜனவரி 19-ம் தேதி நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி மும்பையில் நேற்று தேர்வு செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்ட அவர், நீண்ட இடைவெளிக்குப் பின் அணிக்குத் திரும்பினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 4 இன்னிங்ஸ்களில் 19 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் அவர் நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான அணியில் சேர்க்கப்படவில்லை. ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் ஈஸ்வர் பாண்டே முதல்முறையாக இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான அணிகளில் இவர் இடம் பிடித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய ரஹானே, டெஸ்ட் அணியில் இடம் பெற்றுளார். பிரக்யான் ஒஜா அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஒருநாள் கிரிக்கெட் அணியில் இருந்து யுவராஜ் சிங், மோஹித் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு ஈஸ்வர் பாண்டே, ஸ்டுவர்ட் பின்னி, வருண் ஆரோன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டெஸ்ட் போட்டிக்கான அணி விவரம்:

தோனி (கேப்டன்) ஷீகர் தவாண், முரளி விஜய், புஜாரா, விராட் கோலி, ரோஹித் சர்மா, ரஹானே, ரவீந்திர ஜடேஜா, ஜாகீர் கான், முகமது சமி, இஷாந்த் சர்மா, அம்பத்தி ராயுடு, புவனேஸ்வர் குமார், அஸ்வின், உமேஷ் யாதவ், விர்த்திமான் சாஹா, ஈஸ்வர் பாண்டே.

ஒருநாள் போட்டி அணி விவரம்:

தோனி (கேப்டன்), ஷீகர் தவண், ரோஹித் சர்மா, விராட் கோலி, ரஹானே, அம்பத்தி ராயுடு, ரெய்னா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், முகமது சமி, இஷாந்த் சர்மா, அமீத் மிஸ்ரா, ஈஸ்வர் பாண்டே, ஸ்டுவர்ட் பின்னி, வருண் ஆரோன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x