

ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் மகளிருக்கான குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் தீபா மாலிக் வெள்ளிப் பதக்கம் வென்றார். அவர் 4.61 மீட்டர் தூரம் எறிந்தார். இதன் மூலம் பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் தீபா மாலிக் படைத்தார். 49 வயதான தீபா மாலிக்குக்கு இரு குழந்தைகள் உள்ளனர். தீபாவின் கணவர் ராணுவ அதிகாரி ஆவார்.
17 வருடங்களுக்கு முன்பு முதுகுத்தண்டில் ஏற்பட்ட கட்டி காரணமாக தீபாவால் நடக்க முடியாமல் போனது. அன்று முதல் வீல்சேரில் அமர்ந்த அவர் தன்னம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை. குண்டு எறிதல் தவிர ஈட்டி எறிதல், நீச்சல், பேச்சாளர் ஆகிய பன்முக திறனையும் கொண்டவர் தீபா. சர்வதேச நீச்சல் போட்டிகளில் பல்வேறு பதக்கங்களையும் பெற்றுள்ளார் தீபா மாலிக்.