இந்தியாவிடம் தோல்வி: ரியாஸ் வருத்தம்

இந்தியாவிடம் தோல்வி: ரியாஸ் வருத்தம்
Updated on
1 min read

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிடம் தோற்றதற்காக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது. இப்போட்டியில் பாகிஸ்தான் வீரர் வஹாப் ரியாஸ் மிக மோசமாக பந்துவீசினார். 8.4 ஓவர்களை வீசிய அவர் 87 ரன்களை வாரி வழங்கி னார்.

இந்நிலையில் இந்த போட்டி குறித்து வஹாப் ரியாஸ் தனது ட்விட்டர் தளத்தில் கூறியிருப்ப தாவது:

இந்தியாவுக்கு எதிரான போட்டி யில் எனது பந்துவீச்சு மோசமாக இருந்தது. அதற்காக வருந்துகிறேன். இப்போட்டியில் என்னிடம் சிறப்பான பந்துவீச்சை எதிர்பார்த்த பாகிஸ்தான் ரசிகர்களைக் கைவிட்டு விட்டேன். இப்போட்டியில் சிறப்பாக செயல்பட என்னால் முடிந்தவரை போராடினேன். ஆட்டத்தின் முடிவால் இதயம் நொறுங்கிப் போயுள்ளேன்.

இவ்வாறு ட்விட்டர் தளத்தில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in