பெயெர்ன் முனிச்சில் பயிற்சி பெற 11 வயது சிறுவன் தேர்வு

பெயெர்ன் முனிச்சில் பயிற்சி பெற 11 வயது சிறுவன் தேர்வு
Updated on
1 min read

ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள சபர் சகி என்ற சேரி பகுதியைச் சேர்ந்தவன் சந்தன் நாயக். 11 வயதான இந்த சிறுவன் ஜெர்மனியில் உள்ள பெயெர்ன் முனிச்சில் கால்பந்து பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜெர்மனியில் இருக்கும் பேயெர்ன் முனிச் மிகவும் புகழ்பெற்ற கால்பந்து கிளப். இந்த கிளப் ஆண்ட்ரூ முல்லெர், அர்ஜென் ராப்பன், பிராங்க் ஹென்றி, பியரே ரிபெரி மற்றும் ஜெரோம் அஜினிம் போடெங் ஆகிய கால்பந்து வீரர்களை உருவாக்கியுள்ளது.

தற்போது இந்த கால்பந்து கிளப்பில் பயிற்சி பெறுவதற்கு சபர் சகியின் சந்தன் நாயக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருடைய தாயார் துகாட்டி நாயக் வீட்டு வேலைகள் செய்து வருகிறார். இதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து புவனேஸ்வரில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் சந்தன் நாயக்கை 6-ம் வகுப்பு படிக்கவைத்து வருகிறார். இவருக்கு ரோல் மாடலாக இருப்பது அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி.

இதுதொடர்பாக சந்தன் நாயக் கூறும்போது,

‘‘பெயெர்ன் முனிச்சில் விளையாட தேர்வானது மிகவும் சந்தோஷமாக உள்ளது. இந்திய அணியில் நானும் ஒரு வீரராக இடம் பெற வேண்டும் என்பது எனது விருப்பம். உண்மையில் நான் என் பயிற்சியாளருக்குதான் நன்றி சொல்ல வேண்டும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in