

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதிக்கு, இந்தியாவின் விகாஷ் மாலிக், சுமித் சங்வான் மற்றும் சதிஷ் குமார் ஆகியோர் முன்னேறினர்.
இம்மூன்று வீரர்களுடன், உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷி காலிறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
கஜகஸ்தான் நாட்டின் அல்மாட்டி நகரில் நடைபெற்று வரும் போட்டிகளின் 60 கிலோ எடைப் பிரிவில் விகாஷ் மாலிக், 81 கிலோ எடைப் பிரிவில் சுமித் சங்வான் மற்றும் 91 கிலோ ப்ளஸ் எடைப் பிரிவில் சதிஷ் குமார் ஆகியோர் காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் வெற்றி பெற்றனர்.
முன்னதாக, இந்திய இளம் வீரர் ஷிவ தாபா 56 கிலோ எடைப் பிரிவிலும், மனோஜ் குமார் 64 கிலோ எடைப் பிரிவிலும் காலிறுதிக்கு முன்னேறினர்.
இந்திய வீரர்களின் இந்த எழுச்சி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. உலகக் குத்துச்சண்டை காலிறுதிக்கு 5 வீரர்கள் முன்னேறியிருப்பது இதுவே முதல் முறை என்று இந்திய குத்துச்சண்டை அணியின் பயிற்சியாளர் குர்பாக்ஸ் சிங் சாந்து தெரிவித்தார்.