மும்பை - குஜராத் இன்று மோதல்: அதிரடி பார்முக்கு திரும்புவாரா ரோஹித் சர்மா?

மும்பை - குஜராத் இன்று மோதல்: அதிரடி பார்முக்கு திரும்புவாரா ரோஹித் சர்மா?
Updated on
2 min read

ஐபிஎல் தொடரில் இன்று மாலை 4 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் லயன்ஸ் அணிகள் மோதுகின்றன.

மும்பை அணி 4 ஆட்டத்தில் 3 வெற்றிகளை பெற்றுள்ளது. இந்த சீசனை தோல்வியுடன் தொடங்கிய அந்த அணி அடுத்தடுத்து 3 வெற்றி களை பெற்று அசத்தி உள்ளது. அதிலும் பெங்களூரு அணிக்கு எதிராக கடைசி ஆட்டத்தில் கிடைத்த வெற்றி மும்பை அணியின் தன்னம்பிக்கையை மேலும் அதிகமாக்கி உள்ளது.

அந்த ஆட்டத்தில் சாமு வேல் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த 7 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த நிலையில் பொலார்டு, ஹர்திக் பாண்டியா ஜோடி அபாரமாக விளையாடி வெற்றியை வசப்படுத்தியது. அதிலும் பொலார்டு அனைத்து பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும் சீராக ரன்கள் குவித்தார்.

கேப்டன் ரோஹித் சர்மாவின் மோசமான பார்ம் அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்துவதாக உள்ளது. அவர் லெக் ஸ்பின்னில்

‘கூக்ளி’

பந்துகளை சரியாக கணித்து விளையாட தவறுகிறார். 3 மூன்று ஆட்டங்களிலும் இம்ரன் தகிர், ரஷித்கான், சாமுவேல் பத்ரி ஆகியோரது பந்துகளில் ரோஹித் சர்மா தனது விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். கொல்கத்தாவுக்கு எதிராக ஆப் ஸ்பின்னரான சுனில் நரேன் பந்தில் ஆட்டமிழந்திருந்தார்.

4 ஆட்டங்களிலும் அவர் இது வரை 9 ரன்கள் மட்டுமே சேர்த்துள் ளார். வான்கடே மைதானம் பேட்டிங் குக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ரோஹித் சர்மா பார்முக்கு திரும்ப வாய்ப்புள்ளது. பாண்டியா சகோதரர்கள் ஆல்ரவுண்டர்களாக அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.

பெங்களூரு அணிக்கு எதிராக நெருக்கடியான நேரத்தில் ஹர்திக் பாண்டியா 30 பந்துகளில் 37 ரன்களும், ஹைதராபாத்துக்கு எதி ரான ஆட்டத்தில் கிருனல் பாண்டியா 30 பந்துகளில் 37 ரன்களும் விளாசி அணியின் வெற்றி யில் முக்கிய பங்கு வகித்தனர்.

இதுதவிர ஹர்திக் பாண்டியா வேகப்பந்து வீச்சிலும், கிருனல் பாண்டியா சுழற்பந்து வீச்சிலும் நடு ஓவர்களில் எதிரணியின் ரன்குவிப்பை கட்டுப்படுத்த உதவுகின்றனர். ஆட்டத்தின் எந்தபகுதியிலும் பலம் சேர்க்கும் திறன் கொண்ட இவர்களால் அணி மேலும் வலுவாக திகழ்கிறது.

ஹர்பஜன் சிங் தனது அனு பவத்தால் பவர்பிளே வில் ரன் குவிப்பை கட்டுப்படுத்து கிறார். கடந்த ஆட் டத்தில் ஓய்வு அளிக்கப்பட்ட மலிங்கா இன்று களமிறங்கக் கூடும். இதனால் டிம் சவுத்தி நீக்கப் படுவார். பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் அதிக ரன்கள் தாரைவார்த்திருந்தார்.

குஜராத் அணி முதல் இரு ஆட் டங்களில் தோல்வியை சந்தித்த நிலையில் கடைசி ஆட்டத்தில் புனேவை வீழ்த்தி வெற்றி பாதைக்கு திரும்பி உள்ளது. பிரண்டன் மெக்கலம், டிவைன் ஸ்மித் ஆகியோர் மீண்டும் அதிரடி பார்முக்கு திரும்பி இருப்பது அணிக்கு பலம் சேர்த்துள்ளது.

சுரேஷ் ரெய்னா, ஆரோன் பின்ச் ஆகியோர் நடுக்கள பேட்டிங்கில் நம்பிக்கை அளிப்பவர்களாக உள் ளனர். இந்த நால்வர் கூட்டணி எந்தவகையிலான பந்து வீச்சை யும் வெளுத்து வாங்கி ரன் சேர்க் கும் திறமை கொண்டது. இதனால் மும்பை பந்து வீச்சாளர்களுக்கு இவர்கள் சவாலாக இருக்கக் கூடும்.

ரவீந்திர ஜடேஜா, ஆன்ட்ரூ டை ஆகியோர் பந்து வீச்சில் அணிக்கு பலம் சேர்க்கின்றனர். ஆன்ட்ரூ டை கடந்த ஆட்டத்தில் ஹாட்ரிக் உட்பட 5 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். இவர்கள் இருவருடன் பிரவீண் குமார், ஜகதி ஆகியோரும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் மும்பை பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கலாம்.

இடம்: மும்பை

நேரம்: மாலை 4

நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in