Last Updated : 11 Jan, 2017 09:51 AM

 

Published : 11 Jan 2017 09:51 AM
Last Updated : 11 Jan 2017 09:51 AM

2016-ம் ஆண்டின் சிறந்த வீரர் விருதை வென்றார் ரொனால்டோ

2016-ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருதை போர்ச்சுக்கல் நட்சத்திர வீரரும், ரியல் மாட்ரிட் அணியின் பிரபலமுமான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) வழங்கி கவுரவித்துள்ளது.

அர்ஜென்டினா மற்றும் பார்சிலோனா அணியின் லயோனல் மெஸ்ஸி, பிரான்ஸ் மற்றும் அட்லெடிகோ மாட்ரிட் அணியின் கிரிஸ்மான் ஆகி யோரை பின்னுக்குத் தள்ளி 31 வயதான ரொனால்டோ விருதை வென்றுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் பாலோன் டி ஓர் விருதையும் ரொனால்டோ வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. போர்ச் சுக்கல் அணிக்காக யூரோ கோப்பை யையும், ரியல் மாட்ரிட் அணிக் காக 3-வது முறையாக சாம்பி யன்ஸ் லீக் பட்டத்தையும் வென்று கொடுத்ததால் இந்த விருதை பெற்றுள்ளார் ரொனால்டோ.

சாம்பியன் லீக் தொடரில் ரொனால்டோ 16 ஆட்டங்களில் 12 கோல்கள் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சூரிச் நகரில் நடைபெற்ற விழாவில் பிபா தலைவரான கியானி இன் பாண்டினோவிடம் இருந்து விருதை பெற்ற ரொனால்டோ கூறும்போது, “2016-ம் ஆண்டு எனது வாழ்க்கையில் சிறப்பான ஆண்டாக அமைந்தது’’ என்றார்.

சிறந்த பயிற்சியாளர் விருது லீசெஸ்டர் அணியின் பயிற்சியாளர் ரனியேரிக்கு வழங்கப்பட்டது. 65 வயதான இவரது பயிற்சியின் கீழ் லீசெஸ்டர் அணி, பிரிமியர் லீக் கோப்பையை வென்றிருந்தது.

சிறந்த கால்பந்து வீராங்கனை விருது அமெரிக்காவின் நடுகள வீராங்கனையான கார்லி லாயிடுக்கு வழங்கப்பட்டது. ஒலிம் பிக்கில் இரு முறை தங்கம் வென் றுள்ள கார்லி கடந்த ஆண்டும் பிபாவின் விருதை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விருதுக் கான தேர்வில் கார்லி, பிரேசிலின் மார்தா, ஜெர்மனியின் பெக்ரிங்கர் ஆகியோரை பின்னுக்கு தள்ளி விருதை கைப்பற்றி உள்ளார்.

பிபாவின் சிறந்த வீரர் விருதானது பல்வேறு தேசிய அணிகளின் பயிற்சியாளர்கள், கேப்டன்கள் மற்றும் பத்திரிகை யாளர்கள் குழு, ரசிகர்கள் ஆகியோர் அளிக்கும் ஓட்டுகளின் அடிப்படையில் வழங்கப் படுகிறது. இதில் ரொனால் டோவுக்கு 34.5 சதவீத ஓட்டுகளும், மெஸ்ஸிக்கு 26.4 சதவீத ஓட்டு களும் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x