

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். உமேஷ் யாதவுக்குப் பதில் ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணியில் வெய்ன் பார்னெலுக்குப் பதிலாக ஆண்டிலி பெலுக்வயோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரன்கள் வரும் பிட்ச் என்பதால் இரு அணிகளுமே டாஸ் வென்றால் பவுலிங் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் விராட் கோலி தனது பவுலிங் முடிவு குறித்துக் கூறும்போது, “அணிகள் பொதுவாக இலக்கைத் துரத்தவே விரும்பும். நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க இலக்கை துரத்தும் போது வாய்ப்பு கிடைக்கும். இலக்கைத் துரத்தும் போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வாய்ப்புள்ளது.
உமேஷுக்கு பதில் அஸ்வின் அணிக்கு வந்துள்ளார், தென் ஆப்பிரிக்க அணியில் 3 இடது கை வீரர்கள் இருப்பதை கருத்தில் கொண்டு அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்” என்றார்.
ஏ.பி.டிவில்லியர்ஸ் கூறும்போது, “முதலில் பந்து வீசுவது நல்லதுதான். ஆனால் முதலில் பேட் செய்வதும் மகிழ்ச்சிதான். எது நல்ல ஸ்கோர் என்பதை பேட்ஸ்மென்கள் முடிவு செய்து ஆட வேண்டும்” என்றார்.