Published : 17 Jun 2016 09:43 AM
Last Updated : 17 Jun 2016 09:43 AM

யூரோ கோப்பை கால்பந்து: நாக் அவுட் சுற்றுக்கு பிரான்ஸ் தகுதி

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் கடைசி நிமிட கோல் களால் அல்பேனியா அணியை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு பிரான்ஸ் தகுதி பெற்றது.

யூரோ கால்பந்தில் ஏ பிரிவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் போட்டியை நடத்தும் பிரான்ஸ், அறிமுக அணியான அல்பேனி யாவை எதிர்த்து விளையாடியது. பிரான்ஸ் அணியில் நட்சத்திர வீரர்க ளான கிரிஸ்மான், பால் போக்பா ஆகியோர் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டனர்.

துணிச்சலான முடிவு

ருமேனியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் அணியின் பயிற்சியாளர் டெஸ் சாம்ப்ஸ் இந்த முடிவை மேற்கொண்டார். இவர்கள் இருவருக்கும் பதிலாக ஆண்டனி மார்ஷியல், கிங்ஸ்லி கோமன் களமிறக்கப்பட்டனர்.

இளம் வீரர்களான இரு வரும் முதல் பாதியில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்த வில்லை. முதல் பாதியில் இரு அணி களும் கோல் அடிக்க வில்லை. தர வரிசையில் 42-வது இடத்தில் உள்ள அல்பேனியாவுக்கு எதி ராக கோல் அடிக்க கிடைத்த பல வாய்ப்பு களை பிரான்ஸ் அணி பயன்படுத்த தவறியது.

கிரிஸ்மான்

இரண்டாவது பாதியின் தொடக்கத்தில் மார்ஷிய லுக்கு பதிலாக போக் பாவும், 68வது நிமிடத்தில் கோமனுக்கு பதிலாக கிரிஸ்மானும் களம் இறக் கப்பட்டனர். இதன் பின்னர் பிரான்ஸ் அதிக உத்வேகத்துடன் செயல்பட்டது. 90-வது நிமிடத்தில் அடில் ரமியிடம் இருந்து கிராஸை பெற்ற கிரிஸ்மான் தலையால் முட்டி அருமையாக கோல் அடித்தார்.

இதனால் பிரான்ஸ் 1-0 என முன்னிலை பெற்றது. இதன் பின்னர் இஞ்ஜூரி நேரமாக 6 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இதில் பால் போக்பா கொடுத்த பாஸை, எதிரணி வீரர்களுக்கு போக்கு காட்டி, டிமிட்ரி பயெட் கோல் அடித்து அசத்தினார். முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வெற்றி பெற்றது.

பிரான்ஸ் அணிக்கு இது 2-வது வெற்றியாகும். முதல் ஆட்டத்தில் ருமேனியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது. இரு வெற்றிகளின் மூலம் 4 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்றுக்கு முதல் அணியாக பிரான்ஸ் தகுதி பெற்றது. பிரான்ஸ் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வரும் 19-ம் தேதி நள்ளிரவு சுவிட்சர்லாந்துடன் மோதுகிறது.

யூரோ கோப்பை போட்டிகளை பொறுத்தவரை 2000-ம் ஆண்டில் இத்தாலி அணிக்கு எதிரான இறுதி போட்டிக்கு பிறகு பிரான்ஸ் அணி மாற்று வீரர் மூலம் கோல் அடிப்பது இது தான் முதல் முறை. இந்த போட்டியில் 60 சதவீதம் பிரான்ஸ் அணிதான் பந்தை கட்டிப்பாட்டில் வைத்திருந்தது.

அல்பேனியா அணியின் கட்டுப்பாட்டில் வெறும் 40 சதவீத நேரம் மட்டுமே பந்து இருந்தது. இந்த தொடரில் இதுவரை பிரான்ஸ் அடித்த 4 கோல்களில், 3 கோல்கள் 89-வது நிமிடம் அல்லது அதற்கு பின்பாகவே அடிக்கப்பட்டுள்ளன. இரு ஆட்டத்திலும் கடைசி நிமிடங்களிலேயே பிரான்ஸ் கோல் அடித்துள்ளதால் பயிற்சியாளர் டெஸ்சாம்ப்ஸ் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளார்.

சொந்த மண்ணில் நடைபெற்ற 1984 யூரோ கோப்பையையும், 1998 உலகக் கோப்பையையும் பிரான்ஸ் வென்றிருந்தது. இம்முறையும் அந்த அணி பட்டம் வெல்லக்கூடும் என தொடர் தொடங்குவதற்கு முன்னர் கணிக்கப்பட்ட நிலையில் பிரான்ஸ் அணியின் செயல் பாடு கோப்பையை வெல்லும் அளவுக்கு இருப்பதாக தெரிய வில்லை.

நேற்று முன்தினம் இரவு ஏ பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ருமேனியா-சுவிட்சர்லாந்து மோதின. இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x