Last Updated : 15 Jun, 2017 05:26 PM

 

Published : 15 Jun 2017 05:26 PM
Last Updated : 15 Jun 2017 05:26 PM

உலகின் நம்பர் 1 பாட்மிண்டன் வீரரை வீழ்த்தி வீட்டுக்கு அனுப்பிய இந்திய வீரர் பிரணாய்

இந்தோனேசியன் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டித் தொடரில் மலேசியா வீரரும் உலகின் நம்பர் 1 வீரருமான லீ சாங் வெய் என்பவரை நேர் செட்களில் வீழ்த்தி இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய் காலிறுதிக்குள் நுழைந்தார்.

ஜகார்த்தாவில் நடைபெற்ற போட்டியில் தரவரிசையில் 25-ம் இடத்தில் உள்ள பிரணாய் 21-10, 21-18, என்ற நேர் செட்களில் உலகின் நம்பர் 1 வீரர் லீ சாங்கை 40 நிமிடங்களில் வெளியேற்றினார்.

வெற்றி குறித்து பிரணாய் கூறும்போது, “லீ என்று மிகவும் சாதாரணமாக ஆடினார். வெற்றி பெற்றதில் மகிழ்ச்சியடைகிறேன்.

அதேபோல் கே.ஸ்ரீகாந்த் உலகின் நம்பர் 4 வீரரும் டென்மார்க்கைச் சேர்ந்தவருமான ஜான் ஓ ஜோர்கென்சனை 21-15, 20-22, 21-16 என்ற செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

பிரணாய் அடுத்ததாக காலிறுதியில் ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் சென் லாங்கைச் சந்திக்கிறார்.

உலகின் நம்பர் மலேசியா வீரர் லீ சாங்குக்கு எதிராக பிரணாய் இன்று முழு ஆக்ரோஷத்துடன் ஆடினார், முதலில் 6-0 பிறகு 10-3 என்று முன்னிலை வகித்தார். இப்படியே ஆக்ரோஷமாக ஆடி முதல் செட்டைக் கைப்பற்றினார்.

2வது செட்டிலும் மலேசிய வீரரை அசத்திய பிரணாய் 10-6 என்று முன்னிலை வகித்தார். ஆனால் லீ மீண்டெழ அவர் 13-12 என்று முன்னிலை பெற்று அச்சுறுத்தினார். ஆனால் பிரணாய் அதன் பிறகு சில அபாரமான ஷாட்கள் மூலம் 17-14 என்று சென்றார். பிறகும் லீ ஸ்கோரை சமன் செய்தார். ஆனால் பிரணாய் விடாமல் ஆடி வெற்றி பெற்று, மலேசிய வீரர் 7-வது முறையாக இந்தோனேசிய ஓபன் சாம்பியனாவதை தடுத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x