பிரதான சுற்றில் காஷ்யப், ருத்விகா

பிரதான சுற்றில் காஷ்யப், ருத்விகா
Updated on
1 min read

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன் தொடரின் தகுதி சுற்று ஆட்டங்களில் வெற்றி பெற்ற இந்தியாவின் காஷ்யப், சிரில் வர்மா, ருத்விகா ஷிவானி ஆகியோர் பிரதான சுற்றுக்கு முன்னேறினர்.

சிட்னி நகரில் நேற்று நடைபெற்ற தகுதி சுற்றில் இந்திய வீரர் காஷ்யப் முதல் ஆட்டத்தில் 21-15, 21-18 என்ற நேர் செட்டில் சீனாவின் ஜூன்பெங்கை வீழ்த்தினார். அடுத்த ஆட்டத்தில் இந்தோனேஷிய ஓபனில் இறுதிச் சுற்று வரை முன்னேறிய ஜப்பானின் கஸூமசா சகாயை 21-5, 21-16 என்ற நேர் செட்டில் வீழ்த்திய காஷ்யப் பிரதான சுற்றுக்கு முன்னேறி னார்.

இன்று நடைபெறும் முதல் சுற்று ஆட்டத்தில் காஷ்யப், உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள தென்கொரியாவின் சன் வான் ஹோவை எதிர்த்து விளையாடு கிறார்.

மகளிர் பிரிவில் நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ருத்விகா ஷிவானி 21-15, 21-15 என்ற நேர் செட்டில் ஆஸ்திரேலியாவின் சில்வினாவையும், 21-9, 21-7 என்ற நேர் செட்டில் ஆஸ்திரேலியாவின் ருவின்தி சேராசிங்கேவையும் வீழ்த்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in