

இரு மாதங்களுக்குப் பின் பார்சிலோனா அணியில் இணைந்த நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி இரு கோல்கள் அடித்து தனது அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.
காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த இரு மாதங்களால் மெஸ்ஸி ஓய்வில் இருந்தார். இது பார்சிலோனா அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.
இந்நிலையில் ஸ்பெயினில் நடைபெற்று வரும் ஸ்பானிஸ் கோப்பை கால்பந்து போட்டி யில் கிடாஃபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் மெஸ்ஸி களமிறங்கினார்.
இந்த ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா அபார வெற்றி பெற்றது. மெஸ்ஸி இரு கோல்களை அடித்து அசத்தினார்.