

ஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியானது. இதில், டெஸ்ட் அணியில் இந்தியா இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது. தென் ஆப்பிரிக்கா முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது.
டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில், இந்தியாவின் புஜாரா 6-வது இடத்திலும், விராட் கோலி 20வது இடத்திலும் உள்ளனர்.
டெஸ்ட் பவுலர்கள் தரவரிசையில், அஸ்வின் 5-வது இடத்திலும், ஓஜா 9-வது இடத்திலும் உள்ளனர்.
ஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசையில், இந்தியாவின் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.