

ஐபிஎல் போட்டியில் இளம் வீரர் சஞ்சு சாம்சனை ரூ.4 கோடி ரூபாய் கொடுத்து தக்கவைக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முடிவு செய்துள்ளது.
சமீபத்தில் நடை பெற்ற ஆசிய ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் வென்று இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இப்போட்டியில் சஞ்சு சாம்சன் சதமடித்தார். இதுவே அவரை ராஜஸ்தான் அணி தக்கவைத்துக் கொள்வதற்கு முக்கியக் காரணமாகும். சஞ்சு சாம்சன் இதுவரை சர்வதேச போட்டிகளில் விளையாடியது இல்லை.
இந்த சூழ்நிலையில் அவருக்கு ரூ.4 கோடி கொடுக்க ராஜஸ்தான் அணி நிர்வாகம் முன்வந்துள்ளது. இதன் மூலம் 19 வயதான சஞ்சு சாம்சன் ஐபிஎல் மூலம் இளம் கோடீஸ்வரர் என்ற பெருமையைப் பெறுகிறார். முன்னதாக அவரை கடந்த ஆண்டு ரூ.10 லட்சத்துக்குத்தான் ராஜஸ்தான் ராயல்ஸ் ஒப்பந்தம் செய்தது. கேரள மாநிலத்தைச் சேர்ந்தவரான சஞ்சு சாம்சன் கடந்த ஐபிஎல்-லில் 11 போட்டிகளில் பங்கேற்று 206 ரன்கள் எடுத்தார்.