

சாம்பியன்ஸ் லீக் டிவென்டி 20-ன் முதல் அரையிறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி, இறுதிக்கு முன்னேறியது ராஜஸ்தான் ராயல்ஸ்.
ரஹானேவின் அதிரடி ஆட்டத்தின் உறுதுணையுடன், சென்னை ... ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வென்றது.
ஜெய்ப்பூரில் நடந்து முடிந்த இப்போட்டியில், 160 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி .. ஓவர்களில் ... விக்கெட் இழப்புக்கு ரன்கள் எடுத்துத் தோல்வியைத் தழுவியது.
சுரேஷ் ரெய்னா 29 ரன்களையும், முரளி விஜய் 14 ரன்களையும் எடுத்தனர்.
முன்னதாக, ராஜஸ்தான் ராயல்ஸ் தனது இன்னிங்ஸ்சில், 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது.
அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களுள் ஒருவரான ரஹானே 56 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். வாட்சனின் 32 ரன்களும் அணிக்கு வலு சேர்த்தது. கூப்பர் 14 ரன்களையும், சாம்சன், ஹாட்ஜ் ஆகியோர் தலா 14 ரன்களையும் எடுத்தனர்.