

உலகக் கோப்பை கபடி போட்டி அகமதாபாத்தில் வரும் அக்டோபர் 7-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் போட்டியை நடத்தும் இந்திய அணியுடன், அமெரிக்கா, இங்கி லாந்து, ஆஸ்திரேலியா, ஈரான், போலந்து, தாய்லாந்து, வங்க தேசம், தென் கொரியா, ஜப்பான், அர்ஜென்டினா, கென்யா ஆகிய 12 அணிகள் கலந்து கொள்கின்றன.
இந்த அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏ பிரிவில் இந்தியா, வங்கதேசம், தென் கொரியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அர்ஜென்டினா அணிகளும், பி பிரிவில் ஈரான், தாய்லாந்து, ஜப்பான், அமெரிக்கா, போலந்து, கென்யா அணிகளும் இடம் பெற்றுள்ளன.
அரை இறுதி ஆட்டங்கள் 21-ம் தேதியும், இறுதிப் போட்டி 22-ம் தேதியும் நடைபெறுகிறது. 7-ம் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத் தில் இந்தியா-தென் கொரியா அணிகள் மோதுகின்றன.
இந்தியா தனது 2-வது ஆட்டத்தில் 8-ம் தேதி ஆஸ்திரேலியாவையும், 3-வது ஆட்டத்தில் 11-ம் தேதி வங்கதேசத்தையும், 4-வது ஆட்டத் தில் 15-ம் தேதி அர்ஜென்டினா வையும், கடைசி லீக் ஆட்டத்தில் 18-ம் தேதி இங்கிலாந்து அணியையும் சந்திக்கிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான 14 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
கேப்டனாக அரியாணா வை சேர்ந்த அனுப் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ஆல் ரவுண்டர் மன்ஜித் ஷில்லார் செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணியில் இடம் பிடித்துள்ள 14 வீரர்களில் தமிழகத்தை சேர்ந்த தர்மராஜ் சேரலாதன் ஒருவராவார். பல்வான் சிங் பயிற்சியாளராகவும், பாஸ்கரன் உதவி பயிற்சியாளராகவும் செயல்பட உள்ளனர்.
வீரர்கள் தேர்வு முடிந்த நிலையில் இந்திய அணிக்கான சீருடை அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில் கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் கலந்து கொண்டு சீருடையை அறிமுகப் படுத்தி வைத்தார். நிகழ்ச்சியில் கபடி அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் பல்வான் சிங் உள்ளிட் டோரும் கலந்து கொண்டனர்.
விழாவில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டி யில் வெற்றி பெற்றபோது தான் அணிந்திருந்த டி சர்ட்டில் கையொப்பமிட்டு, அனுப்குமா ருக்கு பரிசாக வழங்கினார் கபில்தேவ்.
இந்திய அணி விவரம்: அனுப் குமார் (கேப்டன்), அஜெய் தாகூர் (இமாச்சல பிரதேசம்), தர்மராஜ் சேரலாதன் (தமிழ்நாடு), கிரண் பார்மர் (குஜராத்), மன்ஜித் ஷில்லார், மோகித் ஷில்லார் (பஞ்சாப்), நிதின் தோமர், ராகுல் சவுத்ரி (உத்தரப் பிரதேசம்), பிரதீப் நார்வல், தீபக் ஹூடா, ஜஸ்வீர் சிங், சந்திப் நார்வல், சுரேந்தர் நாடா சுர்ஜித் (அரியாணா).