

சென்னையில் நடைபெற்ற ஹோண்டா மோட்டார் சைக்கிள் பந்தயத்தின் 2-வது சுற்றுப் போட்டி யில் தமிழக வீரர் மதனகுமார் முதலிடத்தை பிடித்தார்.
சென்னையை அடுத்த இருங் காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் மோட்டார்ஸ் ரேஸ் டிராக் மைதானத்தில் ‘ஹோண்டா ஒன் மேக் ரேஸ் சாம்பியன்ஷிப்-2016’ என்ற மோட்டார் சைக்கிள் பந்தயம் நடைபெற்று வருகிறது. மொத்தம் 5 சுற்றுகள் கொண்ட இந்த சாம்பியன்ஷிப் போட்டியின் 2-ம் சுற்று போட்டிகள் நேற்று முன்தினம் நடைபெற்றன. பல்வேறு பிரிவுகளில் நடந்த இப்போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.
23 வயதுக்குட்பட்டோருக்கான ஹோண்டா சிபிஆர் 150-நோவிஸ் பிரிவில் ஹூப்லியைச் சேர்ந்த அனிஷ் ஷெட்டி முதலிடத்தையும், சென்னையைச் சேர்ந்த பி.எம்.சூரியா 2-வது இடத்தையும், கேரளாவைச் சேர்ந்த மகேஷ் முரளி 3-வது இடத்தையும் பிடித்தனர்.
இதேபோல ‘சிபிஆர் 250-ஓபன்' பிரிவில் நடைபெற்ற போட்டியில் திருச்சியைச் சேர்ந்த எஸ்.மதன குமார் முதலிடத்தையும், பெங்களூ ருவைச் சேர்ந்த வி.அபிஷேக் 2-வது இடத்தையும், சென்னையைச் சேர்ந்த எஸ்.ராஜீவ் 3-வது இடத்தையும் பிடித்தனர்
மகளிர் பிரிவில் நடைபெற்ற போட்டியில் சென்னையைச் சேர்ந்த ஏ.சவுந்தரி முதலிடத்தையும், புனேவைச் சேர்ந்த பூஜா தபி 2-வது இடத்தை யும், பெங்களூரைச் சேர்ந்த ஐஸ்வர் யா 3-வது இடத்தையும் பிடித்தனர்.
இரு சுற்று போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் வரும் செப்டம்பர் 3-ம் தேதி அடுத்த சுற்றுப்போட்டிகள் சென்னையில் நடைபெற உள்ளன.