Last Updated : 04 Apr, 2017 04:41 PM

 

Published : 04 Apr 2017 04:41 PM
Last Updated : 04 Apr 2017 04:41 PM

ஊக்க மருந்து தடை விதிமீறல் பட்டியலில் இந்தியா 3-வது ஆண்டாக 3-ம் இடம்

சர்வதேச ஊக்கமருந்து தடுப்புக் கழகத்தின் 2015-ம் ஆண்டுக்கான ஊக்க மருந்து தடை விதிமீறல் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 3-வது ஆண்டாக 3-ம் இடம்பெற்றுள்ளது.

2015-ம் ஆண்டில் மட்டும் 117 இந்திய வீரர்கள் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து எடுத்துக் கொண்டதற்காக தண்டிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பட்டியலில் ரஷ்யா முதலிடம் (176), இத்தாலி (129) இரண்டம் இடம் என்பது குறிப்பிடத்தக்கது. 2013, 2014ம் ஆண்டு பட்டியலிலும் இதே நிலை இருந்தது.

சிறுநீர் மாதிரிகளில் மட்டுமே இந்திய வீரர்களின் ஊக்க மருந்து விவகாரம் தெரிய வந்துள்ளது.

2015-ம் ஆண்டு ஊக்கமருந்து விதிமீறல் நடந்தது, ஆனால் சிறுநீர் உள்ளிட்ட மாதிரிகள் பரிசோதனைகள் முடிவுகள் முழுதும் இப்போதுதான் அமைப்பிடம் வந்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை கவலையளிக்கும் விஷயம் என்னவெனில் ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்குபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பதே. 2013 மற்றும் 2014-ல் முறையே 91 மற்றும் 96 விதிமீறல்கள் நிகழ்ந்துள்ளது.

தனிநபர் விளையாட்டுகளில் பளுதூக்குதல் பிரிவில் மட்டும் 32 இந்திய ஆடவர் 24 மகளிர் வீரர் விராங்கனைகள் என்று 56 பேர் தடை செய்யப்பட்டுள்ளனர். தடகளம் 21 மீறல்களுடன் 2-ம் இடம் வகிக்கிறது. குத்துச்சண்டையில் 8 வீரர்கள் ஊக்க மருந்தில் சிக்கினர், சைக்கிளிங், கபடி, ஆகியவற்றில் தலா 3 வீரர்கள் ஊக்க மருந்து சோதனையில் சிக்கினர்.

மொத்தம் 229,412 மாதிரிகள் சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு கழகத்திற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x