நிறைய திறமைகள் இருந்தும் இந்திய அணிக்கும் பாக். அணிக்கும் ஏன் இத்தனை இடைவெளி?- இம்ரான் சாடல்

நிறைய திறமைகள் இருந்தும் இந்திய அணிக்கும் பாக். அணிக்கும் ஏன் இத்தனை இடைவெளி?- இம்ரான் சாடல்
Updated on
1 min read

பாகிஸ்தான் அணி இந்திய அணியிடம் தோல்வி தழுவியதையடுத்து முன்னாள் வீரர்கள் அணியையும் பயிற்சியாளரையும் சாடிவரும் வேளையில் ஒட்டுமொத்த பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தையும் மாற்ற வேண்டும் என்கிறார் இம்ரான் கான்.

“ஒரு விளையாட்டு வீரராக விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம் என்பதை அறிந்தேயிருக்கிறேன். ஆனால் எந்த வித போராட்டமும் இல்லாமல் சரணடைந்ததும், இந்திய அணி பாகிஸ்தானை அடித்து நொறுக்கியதும் பார்க்க வலியை ஏற்படுத்தியது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பையே ஒட்டுமொத்தமாக புதுப்பிக்க வேண்டும், நாட்டில் ஏகப்பட்ட திறமைகள் இருந்தும் இந்திய அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடைவெளி அதிகரித்து வருகிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் சேர்மன் பொறுப்பிற்கு அதற்குரிய தொழில்பூர்வ தகுதியுடையவர் ஒருவரை நியமிக்கும் வரை பாகிஸ்தான் கிரிக்கெட் பிரச்சினையைத் தீர்க்க முடியாது.

தேர்தல்-நிர்ணையம் செய்பவர்கள், ஷெரீப்புகளுக்கு வாலாட்டுபவர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட்டை சீரமைக்கவே முடியாது. இதே போன்ற தோல்விகளையும் ஏமாற்றங்களையும் சந்தித்தே ஆக வேண்டியதுதான்”

இவ்வாறு கூறினார் இம்ரான் கான்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in