Published : 01 May 2017 01:42 PM
Last Updated : 01 May 2017 01:42 PM

இளம் பவுலர் சித்தார்த் கவுலை பதற்றமடையச் செய்ய முழங்கையால் இடித்த ராபின் உத்தப்பா

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வியடைந்த போட்டியில் கொல்கத்தா வீரர் ராபின் உத்தப்பா இளம் பவுலர் கவுலை பதற்றமடையச் செய்ய கையாண்ட உத்தி கிரிக்கெட் ஆட்ட உணர்வுக்கு எதிரானது என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

வார்னர் புரட்டி எடுத்து 210 ரன்களை சன் ரைசர்ஸ் இலக்காக நிர்ணையித்த பிறகு கொல்கத்தா இறங்கி நரைன், கம்பீரை விரைவில் இழந்தது. இன்னிங்ஸின் 3-வது ஓவரை கவுல் வீசினார், இந்த ஓவரில் கம்பீரை அவர் வீழ்த்தியிருந்தார்.

இதே ஓவரின் கடைசி பந்தை ராபின் உத்தப்பா பவுண்டரி விளாசினார். ஆனால் பிட்சில் கவுலை கடக்கும் போது உத்தப்பா தேவையில்லாமல் முழங்கையால் கவுலை ஒரு இடி இடித்தார். அதாவது இளம் வேகப்பந்து வீச்சாளரை இதன் மூலம் பதற்றமடையச் செய்வதே உத்தப்பாவின் நோக்கம்.

ஆனால் இதனைப் பார்த்துக் கொண்டிருந்த யுவராஜ் கொஞ்சம் ஏமாற்றமடைந்தார். அவர் தனது எண்ணத்தை உத்தப்பாவுக்குத் தெரியப்படுத்தினார்.

ஹைதராபாத் கேப்டன் வார்னரும் உத்தப்பாவின் இந்தச் செய்கையினால் கோபமடைந்தார்.

ஆனால் இது பெரிய விஷயமாகவில்லை, யுவராஜ் பிறகு உத்தப்பாவிடம் நட்பு பாராட்டும் விதமாக அவரது தோளின் மீது கையைப் போட்டபடி பேசிச்சென்றார்.

கவுல் இதனானெல்லாம் பதற்றமடையாமல் அருமையாக வீசி 4 ஓவர்களில் 26 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x