Published : 30 Sep 2013 12:19 PM
Last Updated : 30 Sep 2013 12:19 PM

சானியாவுக்கு 4-வது பட்டம்

பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா-ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சனிக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் சானியா-காரா பிளாக் ஜோடி 4-6, 6-0, 11-9 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் லீஸெல் ஹியூபர்-சீன தைபேவின் ஹாவ் சின் சான் ஜோடியைத் தோற்கடித்தது.

1 மணி நேரம் 25 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 4-6 என்ற கணக்கில் இழந்த சானியா ஜோடி, 2-வது செட்டில் அபாரமாக ஆடியது. இதனால் அந்த செட்டில் எதிர்ஜோடியின் 3 சர்வீஸ்களையும் முறியடித்த சானியா ஜோடி, முதல் 6 கேம்களிலேயே அந்த செட்டை முடிவுக்கு கொண்டு வந்தது. இதனால் அந்த செட் 6-0 என்ற கணக்கில் சானியா ஜோடி வசமானது.

பின்னர் நடைபெற்ற வெற்றியைத் தீர்மானிக்கும் டைபிரேக்கர் செட்டில் இரு ஜோடிகளுமே அபாரமாக ஆடின. எனினும் கடுமையாகப் போராடிய சானியா ஜோடி 11-9 என்ற கணக்கில் அந்த செட்டை வென்று, சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

இந்த சீசனில் சானியா மிர்சா வென்ற 4-வது சாம்பியன் பட்டம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x