

நியூசிலாந்து - ஜிம்பாப்வே அணி கள் இடையேயான முதல் டெஸ்ட் புலவாயோவில் நேற்று தொடங் கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது. பிரையன் சாரி 4, சிபாபா 15, மகசட்சா 15, வில்லியம்ஸ் 1, எர்வின் 13, சிகந்தர் ராஸா 22, கேப்டன் கிரீமர் 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். 72 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்த நிலையில் 9-வது விக்கெட்டுக்கு திரின்பானோவுடன் இணைந்த அறிமுக வீரர் மாஸ்வயுரே சிறப்பாக விளையாடினார்.
9-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 85 ரன்கள் சேர்த்தது. மாஸ்வயுரே 42 ரன்கள் எடுத்த நிலையில் சவுத்தி பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்த வந்த சினோயுயா 1 ரன்னில் வெளியேற ஜிம்பாப்வே அணி 77.5 ஓவரில் 164 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. திரிபானோ 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து அணி தரப்பில் வாக்னர் 6 விக்கெட்கள் வீழ்த்தினார். இதையடுத்து நியூஸிலாந்து அணி பேட்டிங்கை தொடர்ந்தது.