Last Updated : 31 Dec, 2015 03:02 PM

 

Published : 31 Dec 2015 03:02 PM
Last Updated : 31 Dec 2015 03:02 PM

42 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பந்துவீச்சாளர்களில் நம்பர் ஒன் இடம் பிடித்து அஸ்வின் சாதனை

ஐசிசியின் டெஸ்ட் பந்து வீச்சா ளர்கள் தரவரிசைப்பட்டியலில் இந்தியாவின் அஸ்வின் முதலி டத்தை பிடித்தார். ஆல் ரவுண்டர் வரிசையிலும் அவர் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

அஸ்வின் 2015ல் ஒன்பது டெஸ்டில் பங்கேற்று 62 விக்கெட் டுகள் வீழ்த்தினார். தென் ஆப்பிரிக் காவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் மட்டும் அவர் 31 விக்கெட் சாய்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வீரர்களில் 1973ல் பிஷன்சிங் பேடி மட்டுமே ஆண்டின் இறுதியில் தரவரிசைப்பட்டியலில் முதலிடத் தை பிடித்திருந்தார்.

42 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மைல்கல்லை அஸ்வின் தற்போது எட்டியுள்ளார். மற்ற இந்திய வீரர்களில் பகவத் சந்திரசேகர், கபில் தேவ், அனில் கும்பிளே ஆகியோர் அதிகபட்சமாக ஐசிசி தரவரிசைப்பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளனர். அஸ்வின் முதன்முறையாக முதலி டத்தை பிடித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவின் ஸ்டெயின், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் 2வது இன்னிங்ஸில் வெறும் 3.5 ஓவர்கள் மட்டுமே வீசிய நிலையில் காயம் அடைந் தார். தொடர்ந்து அவர் பந்து வீசாததால் தற்போது முதலிடத்தை இழந்துள்ளார்.

அஸ்வின் 871 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஸ்டெயின் 867 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளனர். கடந்த 6 வருடங்களாக ஆண்டு இறுதியில் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டிருந்த ஸ்டெயின், டர்பன் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் வீழ்த்தியபோதும் அது முதலிடத்தை தக்க வைக்க உதவவில்லை. அஸ்வின் 2015ம் ஆண்டின் தொடக்கத்தில் 15வது இடத்தில் இருந்தார். படிப்படியாக முன்னேறி தற்போது முதலிடத் துக்கு வந்துள்ளார்.

இதுதொடர்பாக அஸ்வின் கூறும்போது, “ஆண்டின் இறுதி யில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது எனது பந்து வீச்சுக்கு மேலும் அழகு சேர்ப்பது போல் உள்ளது. 12 மாதங்களில் என்னால் இதை உருவாக்க முடிந்துள்ளது. முதலிடத்தை பிடிக்க வேண்டும் என எப்போதும் விரும்புவேன். 2015ம் ஆண்டு இதைவிட சிறப் பானதாக இருக்க முடியாது.

சுழற் பந்து வீச்சில் தலை சிறந்தவராக திகழ்ந்தவர் பேடி. அவரது பாதையில் நானும் செல்வது மகிழ்ச்சியளிக்கிறது. டெஸ்ட் கேப்டன் விராட் கோலிக்கு நன்றி கூற விரும்பு கிறேன். அணியின் சக வீரர்கள், நிர்வாகம், பிசிசிஐ ஆகியோரும் பெரிய அளவில் எனக்கு ஆதர வளித்தனர்” என்று தெரிவித்தார்.

29 வயதான அஸ்வின் ஆல்ரவுண்டர் வரிசையிலும் முதலிடத்தை பிடித்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் ஆல் ரவுண்டர் பட்டியலில் அஸ்வின் 2வது முறையாக முதலிடம் பிடித் துள்ளார்.

பேட்ஸ்மேன்களில் ஆஸ்தி ரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தை பிடித்துள்ளார். 4-வது இடத்தில் இருந்த அவர் மெல்பர்ன் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 134 ரன்னும், 2வது இன்னிங்ஸில் 70 ரன்னும் சேர்த்ததின் மூலம் நியூஸிலாந்தின் வில்லியம்சனை 2வது இடத்துக்கு பின்னுக்கு தள்ளி முதலிடத்தை கைப்பற்றியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x