

ஆஆஸ்திரேலிய ஓபன் தகுதி சுற்றின் 2-வது ஆட்டத்திலும் இந்தியாவின் யூகி பாம்ப்ரி வெற்றி பெற்றார்.
ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்தி ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வரும் 16-ம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. இதையொட்டி தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதில் ஆடவர் பிரிவில் தரவரி சையில் 534-வது இடத்தில் உள்ள இந்தியாவின் யூகி பாம்ப்ரி தனது முதல் சுற்றில், அமெரிக்காவின் ஸ்டீபன் கோஸ்லோவை தோற் கடித்திருந்தார். இந்நிலையில் 2-வது ஆட்டத்தில் செர்பியாவின் பெட்ஜா கிறிஸ்டினை எதிர்த்து நேற்று விளையாடினார்.
இதில் பாம்ப்ரி 6-3, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் 68 நிமிடங்கள் நடைபெற்றது. 24 வயதான பாம்ப்ரி தனது கடைசி சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 133-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் எர்னஸ்டோவை எதிர்த்து விளையாடுகிறார்.
இதில் பாம்ப்ரி வெற்றி பெறும் பட்சத்தில் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் பிரதான சுற்றுக்கு முன்னேறுவார். பாம்ப்ரி கூறும் போது, “மீண்டும் ஒரு சிறந்த வெற்றி எனக்கு கிடைத்துள்ளது. சிறப்பாக சர்வீஸ்கள் செய்த நான், முக்கியமான கட்டத்தில் பெட்ஜாவின் சர்வீஸை முறியடிக் கவும் செய்தேன். இதுதான் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத் தியது. கடைசி ஆட்டம் கடின மாகவே இருக்கும்’’ என்றார்.