கொல்கத்தா அணியுடன் இணைந்தார் உமேஷ் யாதவ்

கொல்கத்தா அணியுடன் இணைந்தார் உமேஷ் யாதவ்

Published on

இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளரான உமேஷ் யாதவ், ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி யினருடன் இணைந்தார். இதனால் அந்த அணியின் பந்து வீச்சு பலம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற உமேஷ் யாதவுக்கு முதுகுவலி காரணமாக ஒரு வார காலம் ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலை யில் நேற்று அவர் கொல்கத்தா அணியினருடன் இணைந்து பயிற்சியை தொடங்கினார். அவர் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக நாளை நடைபெறும் ஆட்டத்தில் களமிறங்கக்கூடும். அவர் களமிறங்கும் பட்சத்தில் அங்கித் ரஜ்புத் நீக்கப்படுவார்.

இதற்கிடையே 29 வய தான உமேஷ் யாதவ், கொல் கத்தா அணியினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடும் புகைப் படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள் ளார். தனது பதிவில், கொல்கத்தா அணியினருடன் முதல்நாள் பயிற் சியை தொடங்கியுள்ளதாக தெரி வித்துள்ளார்.

உமேஷ் யாதவ், கொல்கத்தா அணி பங்கேற்ற முதல் இரு ஆட்டங்களில் பங்கேற்கவில்லை. உள்நாட்டு சீசனில் அவர் இந்திய அணிக்காக 12 ஆட்டங்களில் விளையாடி இருந்தார்.

உமேஷ் யாதவ் அணிக்கு மீண்டும் திரும்பி உள்ளதால் பந்து வீச்சில் அந்த அணியின் பலம் அதிகரிக்கும் என கருதப்படுகிறது. முதல் ஆட்டத்தில் குஜராத் அணியை புரட்டி எடுத்த கொல் கத்தா அணி தனது 2-வது ஆட்டத்தில் மும்பையிடம் தோல்வி யடைந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

இதற்கிடையே கடந்த ஆட்டத்தில் தோள்பட்டையில் காயம் அடைந்த அதிரடி தொடக்க வீரர் கிறிஸ் லின் நாளைய ஆட் டத்தில் களமிறங்குவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது.

2014-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுக வீரராக களமிறங்கிய கிறிஸ் லின், இதே ஆண்டில் தோள்பட்டை காயத் துக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். 2015-ம் ஆண்டும் இதே போன்று காயம் காரணமாக அவர் அவதிப்பட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in