

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் 23 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடர் வரும் 15-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை வங்கதேசத்தில் உள்ள டாக்காவில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு நாடுகள், ஹாங்காங், நேபாளம் ஆகிய 8 நாடுகளை சேர்ந்த அணிகள் கலந்து கொள்கின்றன.
இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. கேப்டனாக தமிழகத்தை சேர்ந்த ஆல்ரவுண்டரான பாபா அபராஜித் நியமிக்கப்பட்டுள்ளார். இளம் வீரர்களான மும்பையை சேர்ந்த பிரித்வி ஷா, மேற்கு வங்கத்தை சேர்ந்த தொடக்க பேட்ஸ்மேன் அபிமன்யூ ஈஸ்வரன், சுழற்பந்து வீச்சாளர் அமிர் கானி, இடது கை வேகப்பந்து வீச்சாளர் கனிஷ்க் ஷேத் உள்ளிட்டோரும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களுடன் உள்ளூர் போட்டி களில் நட்சத்திர வீரர்களாக வலம் வரும் ஹனுமா விகாரி, மயங்க் தாகர், விராட் சிங் ஆகியோரும் தேர்வாகி உள்ளனர். துணை கேப்டனாக இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் அங்குஷ் பெயின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் நடத்தப்பட்டு வரும் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்கான இந்த தொடரில் இந்திய அணி கடைசியாக 2013-ல் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. சிங்கப்பூரில் நடைபெற்ற இந்த தொடரில் சூர்ய குமார் தலைமை யில் இந்திய அணி களமிறங்கியது.
தற்போதைய கேப்டன் அபராஜித், கே.எல்.ராகுல், ஜஸ்பிரித் பும்ரா, உன்முகுந்த் சந்த், அக் ஷர் படேல் ஆகியோரும் விளையாடினார்கள். இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ் தானை வீழ்த்தி பட்டம் வென்றி ருந்தது. 160 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய அந்த ஆட்டத்தில் கே.எல்.ராகுல் 107 பந்துகளில் 93 ரன்கள் விளாசி வெற்றிக்கு உதவியிருந்தார்.
இந்திய அணி விவரம்:
பாபா அபராஜித் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், பிரித்வி ஷா, சுபம் கில், ஹனுமா விகாரி, விராட் சிங், சிவம் சவுத்ரி, அங்குஷ் பெயின்ஸ், ராகுல் ஷாகர், மயங்க் தாகர், அமிர் கானி, அஸ்வின் கிறிஸ்ட், கே.ஆர்.சசிகாந்த், கமலேஷ் நாகர்கோட்டி, கனிஷ்க் ஷேத்.