2வது ஒருநாள் போட்டி: உமேஷ் யாதவ் அணியில்; இந்தியா பேட்டிங்

2வது ஒருநாள் போட்டி: உமேஷ் யாதவ் அணியில்; இந்தியா பேட்டிங்
Updated on
1 min read

டெல்லியில் நடைபெறும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்ய முடிவெடுத்துள்ளது.

ஷிகர் தவன் 1 ரன் மட்டுமே எடுத்து டெய்லர் பந்தில் கிளீன் பவுல்டு ஆனார். இந்திய அணியில் காயமடைந்த மோகித் சர்மாவுக்குப் பதிலாக உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தப் போட்டியிலும் புதிர் பவுலர் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. மோசமாக வீசிய அமித் மிஸ்ரா விளையாடுகிறார்.

மேற்கிதிய தீவுகள் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நடுவர்களாக இங்கிலாந்தின் ஐ.ஜே.கோல்டு, மற்றும் எஸ்.ரவி ஆகியோர் பணியாற்றுகின்றனர். டிவி நடுவர்: சி.ஷம்சுதீன்.

மைக்கேல் ஹோல்டிங் தனது பிட்ச் அறிக்கையில், இது முதலில் பேட் செய்வதற்கான பிட்ச் என்று கணித்துள்ளார். அதற்கேற்ப தோனி பேட்டிங் எடுத்துள்ளார் என்று தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in