

பிரிட்டிஷ் ஓபன் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா தோல்வியடைந்தார்.
லண்டனில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஜோஷ்னா தனது 2-வது சுற்றில், 3-ம் நிலை வீராங்கனையான எகிப்தின் ரனீம் எல் வெலியை எதிர்த்து விளையாடினார். இதில் ஜோஷ்னா 8-11, 7-11, 7-11 என்ற நேர் செட்டில் தோல்வியடைந் தார்.
இந்த ஆட்டம் 27 நிமிடங் களில் முடிவடைந்தது. இதன் மூலம் இந்த தொடரில் இந்திய நட்சத்திரங்களின் பங்களிப்பு முடிவுக்கு வந்தது. ஏற்கெனவே தீபிகா பாலிகல் தோல்வியடைந் திருந்தார்.