

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் சிவா தபா கால் இறுதிக்கு முன்னேறினார்.
உஸ்பெகிஸ்தானின் தாஷ் கண்ட் நகரில் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் ஆடவர் பிரிவில் 4-ம் நிலை வீரரான சிவா தபா 60 கிலோ எடை பிரிவில், கிர்கிஸ்தானின் ஒமர்பெக் மலாபெஹோவை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.
உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கமும், ஆசிய போட்டியில் இருமுறை பதக்கமும் வென்றுள்ள சிவா தபா, கால் இறுதிச் சுற்றில் சீனாவைச் சேர்ந்த சூ என் லாயை எதிர்த்து விளையாட உள்ளார்.
இதேபோல் 91 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் சுமித் சங்வான் கால் இறுதிக்கு முன்னேறினார். அவர், கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் மங்கோலியாவைச் சேர்ந்த எர்டன்பேயர் சன்டக்சுரனை வீழ்த்தியிருந்தார். கால் இறுதியில் 3-ம் நிலை வீரரான சீனாவின் பெங்ஹாய் யு-வை எதிர்கொள்கிறார் சுமித் சங்வான்.
மற்றொரு இந்திய வீரரான மனோஜ் குமார் 69 கிலோ எடை பிரிவில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஹிமியை வீழ்த்தி கால் இறுதியில் நுழைந்தார். அவர் கால் இறுதியில் மங்கோலியாவை சேர்ந்த பயம்பாவுடன் மோதுகிறார்.
81 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் மணீஷ் பவார், 49 கிலோ எடை பிரிவில் கவிந்தர் சிங் பிஷ்த் ஆகியோரும் கால் இறு திக்கு முன்னேறினார்கள்.
ஏற்கெனவே இந்திய வீரர் களான விகாஷ் கிருஷ்ணன் 75 கிலோ எடை பிரிவிலும், கவுரவ் பிதுரி 56 கிலோ எடை பிரிவிலும், அமித் பங்கல் 49 கிலோ எடை பிரிவிலும் கால் இறுதிக்கு முன் னேறி உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.