ஐஎஸ்எல் கால்பந்து சென்னை – மும்பை இன்று மோதல்

ஐஎஸ்எல் கால்பந்து சென்னை – மும்பை இன்று மோதல்
Updated on
1 min read

இண்டியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் இன்று சென்னையில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்சி –மும்பை சிட்டி அணிகள் மோத இருக்கின்றன. சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் இரவு 7 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது.

சென்னை அணி முதல் ஆட்டத்தில கோவாவையும், 2–வது ஆட்டத்தில் கேரளாவையும் தோற்கடித்தது. 3–வது ஆட்டத்தில் டெல்லி அணியிடம் 1–4 என்ற கோல் கணக்கில் மோசமாக தோற்றது. இப்போது 4–வது ஆட்டத்தில் மும்பையை எதிர்கொள்கிறது.

மும்பை அணி தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் 0– 3 என்ற கணக்கில் தோற்றது. 2–வது ஆட்டத்தில் புனே அணியை 5–0 என்ற கணக்கில் வென்றது. 3–வது ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனெடட் அணியிடம் 0–2 என்ற கணக்கில் தோற்றது. ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் இதுவரை 14 ஆட்டம் முடிந்துள்ளன. கொல்கத்தா 3 வெற்றி, 2 டிராவுடன் 11 புள்ளி பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

நார்த் ஈஸ்ட் யுனெடட் 7 புள்ளி, சென்னையின் எப்சி 6 புள்ளி, டெல்லி டைனமோஸ் 5 புள்ளி, புனே சிட்டி 4 புள்ளி, மும்பை சிட்டி 3 புள்ளி, கேரளா பிளாஸ்டர்ஸ் 1 புள்ளி என்ற நிலையில் உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in