

ஹாக்கி இந்தியா தலைவர் நரீந்தர் பத்ராவின் மகன் துருவ் (27) மொராக்கோவில் மரணமடைந்தார். 4 நாட்களுக்கு முன்னதாக தனது தந்தையுடன் மொராக்கோ சென்றிருந்த துருவ், வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட தொற்றுநோய் காரணமாக மரணமடைந்ததாக நரீந்தர் பத்ராவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. துருவின் உடல் இன்று இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது. துருவின் மறைவுக்கு டெல்லி கிரிக்கெட் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.