Last Updated : 06 Jun, 2017 09:42 AM

 

Published : 06 Jun 2017 09:42 AM
Last Updated : 06 Jun 2017 09:42 AM

நட்புரீதி கால்பந்து போட்டி: இந்தியா - நேபாளம் இன்று மோதல்

நட்புரீதியிலான கால்பந்து போட்டியில் இந்தியா - நேபாளம் அணிகள் இன்று மும்பையில் மோதுகின்றன. காயத்தில் இருந்து குணமடைந்துள்ள நட்சத்திர வீரரான சுனில் ஷேத்ரி இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவது இந்திய அணிக்கு கூடுதல் பலமாக கருதப்படுகிறது.

பிபா தரவரிசை பட்டியலில் 100-வது இடத்தில் உள்ள இந்திய அணி, ஆசிய கோப்பை தகுதி சுற்று ஆட்டத்தில் வரும் 13-ம் தேதி கிர்கிஸ்தானுடன் மோத உள்ளது. இதனால் இன்று நடைபெறும் நட்புரீதியிலான ஆட்டம் கிர்கிஸ்தான் போட்டிக்கு சிறப்பாக தயாராக உதவும்.

தொடை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால் நட்சத்திர வீரரான உடாண்டா இன்றைய ஆட்டத்தில் களமிறங்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - நேபாளம் அணிகள் கடைசியாக கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற தெற்கு ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடரில் மோதின. இதில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x