

ரியோ ஒலிம்பிக் போட்டியின் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இந்த முறை தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோகோவிச் முதல் சுற்றிலேயே நடையைக் கட்டி யது செர்பிய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.
இந்நிலையில் ஆடவர் இரட்டையர் இரண்டாவது சுற்றில் ஜோகோவிச் - ஜிமோன்ஜிக் ஜோடி 4-6,4-6 என்ற நேர் செட்களில் பிரேசிலைச் சேர்ந்த மார்செலோ மெலோ - புருனோ சோர்ஸ் ஜோடியிடம் தோல்வியடைந்தது.
இதனால் ரியோ ஒலிம் பிக் போட்டியிலிருந்து ஜோகோ விச் பரிதாபமாக வெளியே றினார்.