

இந்தியா - வங்கதேசம் இடையே யான டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஐதராபாத்தில் நடக்கிறது.
வங்கதேச கிரிக்கெட் அணி கடந்த 2000-ம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் ஆடும் அந்தஸ்தைப் பெற்றது. இருப்பினும் அந்த அணி இதுவரை இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டி எதிலும் ஆட வில்லை. இந்நிலையில் இந்தியா - வங்கதேசம் இடையிலான ஒரு போட்டியைக் கொண்ட டெஸ்ட் தொடரை நடத்த தீர்மானிக் கப்பட்டுள்ளது.
இப்போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை ஐதராபாத்தில் நடக்கிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் அஜய் ஷிர்கே வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் புதிய அனுபவம் பெற, இந்த டெஸ்ட் மிகவும் உபயோகமாக இருக் கும் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஸ்முல் ஹஸன் கூறியுள்ளார்.