

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் பயிற்சியின் போது காயம் அடைந்தார்.
பாகிஸ்தானுடனான இறுதிப் போட்டியையொட்டி இந்திய அணி வீரர்கள் நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது பீல்டிங் பயிற்சியில் ஈடுபட்ட அஸ்வினுக்கு வலது காலின் மூட்டு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் பயிற்சியில் இருந்து உடனடியாக அவர் வெளியேறினார்.
காயம் ஏற்பட்ட இடத்தில் வலி அதிகமாக இருந்ததால் அஸ்வினின் கால் மூட்டு பகுதியில் ‘ஐஸ் பேக்’ கட்டப்பட்டது. சுமார் அரை மணி நேர ஓய்வுக்கு பிறகு வழக்கம் போல் அஸ்வின் மீண்டும் பயிற்சியை தொடங்கினார்.