

ஐஎஸ்எஸ்எப் உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஜித்து ராய் வெள்ளி பதக்கம் வென்றார்.
அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஆடவர் பிரிவில் ஜித்து ராய் இறுதி சுற்றில் 199.5 புள்ளிகள் எடுத்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். பிரேசிலின் பெலிப் அல்மெய்டா வூ 200 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார்.
தகுதி சுற்றில் முதலிடம் பிடித்த கொரியாவின் ஜாங்கோ ஜின் 178.8 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் கைப்பற்றி னார்.
தகுதி சுற்றில் ராய் 580 புள்ளிகளுடன் 6-வது இடமும், தங்கப் பதக்கம் வென்றவரான பெலிப் அல்மெய்டா 7-வது இடமும் பெற்றிருந்தனர். ரியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து பதக்கம் வெல்பவர்களில் ஒருவராக ஜித்து ராய் கருதப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.